உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ராஜபாளையம் சாஸ்தா கோவில் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ராஜபாளையம் சாஸ்தா கோவில் அணையிலிருந்து 3,130 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் அமைச்சர் மற்றும் ஆட்சியர் தண்ணீர் திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 7 கிராமங்களில் உள்ள 11 கண்மாய்கள் மற்றும் மொத்தம் 3,130 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளன.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ராஜபாளையம் சாஸ்தா கோவில் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோவில் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நகரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 36.47 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. பருவமழை குறைந்ததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டது. எனவே, அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி ஆகியோர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்தனர். அப்போது தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர். இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து 48 நாட்கள் வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 7 வருவாய் கிராமங்களில் உள்ள 11 கண்மாய்கள் பயன் பெறுவதுடன், கண்மாய் பாசனம் மூலம் 2,679 ஏக்கரும், நேரடி பாசனம் மூலம் 451 ஏக்கரும் என மொத்தம் 3,130 ஏக்கர் நிலம் பயனடைய உள்ளது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50