தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஓசூர் ஜுஜுவாடி காவல் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு வாலிபர்களின் பைகளைச் சோதனையிட்ட போது, 7 பெட்டிகளில் 1,600 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மருத்துவர்களின் ஆலோசனையின்றி பெங்களூரு காந்திநகர் பகுதியில் இருந்து மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த மங்கோல், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோமின்லால் டாகெல் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளனர். போதைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை பெங்களூருவில் யாரிடம் வாங்கினர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 1,600 போதை மாத்திரைகள் பறிமுதல் - இருவர் கைது
ஓசூரில் அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 1,600 போதை வலி நிவாரண மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார், இரண்டு வடமாநில வாலிபர்களைக் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 1,600 போதை வலி நிவாரண மாத்திரைகளை ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




