உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தஞ்சையில் 441 கிலோ புகையிலைப் பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது – ரூ.82 ஆயிரம், கார் பறிமுதல்

தஞ்சையில் 441 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து கார், பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் 441 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த பிரதாப் என்பவரை போலீசார் கைது செய்து, ரூ.82 ஆயிரம் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தஞ்சையில் 441 கிலோ புகையிலைப் பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது – ரூ.82 ஆயிரம், கார் பறிமுதல்

 தஞ்சை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நேசனல் பார்மா நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், 441 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.82 ஆயிரம் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார். 



எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50