நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் காவல் உதவி ஆய்வாளர் சந்தியா தலைமையிலான போலீசார் இன்று காலை ஆத்தூர் சாலையில் உள்ள கொம்பேத்தங்கள்மேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆத்தூரில் இருந்து மங்களபுரம் நோக்கி வந்த கிரெட்டா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காருடன் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் ஹனுமானா ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், விசாரணையில், இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜிகினி பகுதியில் வசித்து வந்ததும், ஹான்ஸ் பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய மங்களபுரம் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல் – இருவர் கைது
ராசிபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வாகனத் தணிக்கையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




