உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

புலியை துரத்தியதாக அமைச்சர் வன்னியரசு மீது புகார்

முதுமலை வனப்பகுதியில் புலியை அமைச்சர் வன்னியரசு துரத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதுமலை வனப்பகுதியில் அமைச்சர் வன்னியரசு புலியை துரத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கந்தன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
புலியை துரத்தியதாக அமைச்சர் வன்னியரசு மீது புகார்

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் அமைச்சர் வன்னியரசு புலியை துரத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நவம்பர் 10-ம் தேதி மசினகுடி பகுதியில் அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திச் செல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என கோரியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தவும், வீடியோ ஆதாரங்களை பாதுகாக்கவும் வலியுறுத்தியுள்ளார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் தலைமையிலான சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50