சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதிக்கு சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்திய போது, போதைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து, அவர் எங்கிருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்தார், யாருக்கெல்லாம் விற்பனை செய்து வந்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றத்தில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது
செங்குன்றம் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் வாலிபரிடம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை செங்குன்றம் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரிடம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




