சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ஸ்டாக்லி என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கன்சல்டன்சி மூலம் புதிய ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது. அவர்களிடம் வைப்புத்தொகை என்ற பெயரில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்துள்ளது. மேலும், அனுபவமுள்ள ஊழியர்களுக்கும் 5 மாதங்கள் பயிற்சிக் காலம் நிர்ணயித்து, வாக்குறுதி அளித்தபடி சம்பளம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பளம் கேட்ட போது நிறுவனத்தின் உயர்மட்ட ஊழியர்கள் மிரட்டியதாகவும், பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவித்தனர்.தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, ரூ.500 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திலும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.500 கோடி மோசடி
சேலத்தில் ஐடி வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக ஸ்டாக்லி நிறுவனம் மீது ஊழியர்கள் புகார் அளித்தனர்.
சேலத்தில் செயல்படும் ஸ்டாக்லி ஐடி நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து, சம்பளம் வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
