சென்னை ராயப்பேட்டை நல்லண்ண முதலி தெருவைச் சேர்ந்தவர் சியாமளா. இவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இவரது ஒரே சகோதரர் முரளியும் 2023-ம் ஆண்டு உயிரிழந்தார். முரளிக்கு வெள்ளானூர் கிராமத்தில் 2,621 சதுர அடி வீட்டுமனை இருந்தது. இதன் ஒரே வாரிசான சியாமளா அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். அப்போது, இறந்துபோன முரளியைப் போல் மற்றொருவரை அழைத்துச் சென்று ஆள்மாறாட்டம் செய்து, உஷா என்பவருக்கு பிப்ரவரி மாதம் நிலத்தை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.இது குறித்து சியாமளா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் ஆவடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உஷா, அவரது கணவர் குமார் மற்றும் நண்பர்கள் சிலர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து குமார், உஷா, வெற்றிவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இறந்தவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் மோசடி? - மூவர் கைது
இறந்தவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அருகே இறந்தவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




