சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகர் சமுதாய நலக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார். பின்னர், விழாவில் பேசிய அமைச்சர், ஒரு குழந்தைக்கு தாய் அருகில் இருந்தால் உலகத்தையே வெல்லும் தன்னம்பிக்கை கிடைக்கும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது ஐந்து வயதிலேயே தாயைப் பிரிந்த வலியை உணர்ந்ததாகவும், இன்றுவரை அந்த ஏக்கம் தன்னுள் நீடிப்பதாகவும் மனம் திறந்து பேசினார். தொடர்ந்து, ஜாதி, மதம், பணம், புகழ் என அனைத்தையும் விட அம்மா முக்கியம். அம்மா இல்லை என்கிற ஒரு வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என்ற அவரது வார்த்தைகள் பலரையும் நெகிழச் செய்தன.மேலும், குழந்தைகளை விளையாட்டு, கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் சாதனையாளர்களாக உருவாக்க பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வில்லிவாக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு
வில்லிவாக்கம் சமூக வளைகாப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாயின் அன்பையும் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பையும் வலியுறுத்தினார்.
வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நடைபெற்ற சமூக வளைகாப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்று, தாயின் அன்பின் மகத்துவத்தை உருக்கமாக எடுத்துரைத்ததுடன், குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, அறிவியல் வளர்ச்சிக்கு பெற்றோர் ஊக்கமளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




