உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கரையான்கள் அரித்ததில் ரூ.4.88 லட்சம் நோட்டுகள் நாசம் – எலக்ட்ரீசியன் கண்ணீர்

நாகையில் எலக்ட்ரீசியன் ஒருவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த ரூ.4.88 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்து சேதப்படுத்தின.

நாகையில் எலக்ட்ரீசியன் ஒருவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த ரூ.4.88 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்து சேதப்படுத்தின. பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வரும் அவர் வேதனை அடைந்துள்ளார்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கரையான்கள் அரித்ததில் ரூ.4.88 லட்சம் நோட்டுகள் நாசம் – எலக்ட்ரீசியன் கண்ணீர்

நாகப்பட்டினம் மாவட்டம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் தனது உழைப்பில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை வீட்டில் உள்ள மர அலமாரியில் சேமித்து வைத்திருந்தார்.இந்நிலையில், வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவதற்காக 2 நாட்களுக்கு முன்பு அலமாரியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்து சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மொத்தம் ரூ.4 லட்சத்து 88 ஆயிரம் பணம் சேதமடைந்தது. இதையடுத்து, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளை அணுகியுள்ளார். அப்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு சென்ற போது, சீரியல் எண்கள் இல்லாத நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும், முழுத் தொகையும் கிடைக்கும் என உறுதியளிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து,.உழைத்துச் சம்பாதித்த பணத்தை இழந்ததால் செல்வமுருகன் வேதனை அடைந்துள்ளார்.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50