சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆலமரத்துக்காட்டூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தொழில் தொடர்பாக பலரிடம் கடன் வாங்கியிருந்த சிவகுமார், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சிவகுமார், ராசிபுரம் அருகே உள்ள அல்லேரி முனியப்பன் கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு அவர் தீக்குளித்து உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே கடன் சுமையால் வெள்ளிப் பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு
ராசிபுரம் அருகே கடன் சுமையால் வெள்ளிப் பட்டறை தொழிலாளி சிவகுமார் தீக்குளித்து உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் அருகே கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி சிவகுமார் கோவிலில் தீக்குளித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
