திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் பூவரசன் என்பவர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் இன்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலை முன்பு திரண்டனர்.தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமும், தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததுமே உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், உரிய இழப்பீடு வழங்கக் கோரி பூவரசனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து வந்த வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, உறவினர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பலி – உறவினர்கள் போராட்டம்
வாணியம்பாடி அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி பூவரசன் உயிரிழந்தார். உறவினர்கள் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி பூவரசன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் உரிய இழப்பீடு வழங்கக் கோரி தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




