உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – இருவர் பலி

திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதி  விபத்து –  இருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குழுவினர் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த வேன் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பக்தர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சிக்கிய ஓட்டுநரும், பக்தர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவலறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த 13 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50