உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருமண முன்விரோதம் காரணமாக மீனவரின் 2 படகுகளுக்கு தீ வைப்பு – 4 பேர் கைது

குலசேகரப்பட்டினம் அருகே திருமண முன்விரோதம் காரணமாக மீனவரின் 2 படகுகளுக்கு தீவைத்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே திருமண முன்விரோதம் காரணமாக மீனவர் ரஞ்சித்துக்குச் சொந்தமான 2 படகுகளுக்கு தீவைத்த முத்துராமன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருமண முன்விரோதம் காரணமாக மீனவரின் 2 படகுகளுக்கு தீ வைப்பு – 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே மாடசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் மீன்ப்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமான 2 படகுகள் நேற்று மாடசாமிபுரம் கடற்கரையில் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் காணப்பட்டன. இது குறித்து ரஞ்சித் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர், முத்துராமன் என்பவரின் சகோதரருக்குப் பெண் பார்க்கப்பட்டிருந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக முத்துராமன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து ரஞ்சித்தின் 2 படகுகளுக்கும் தீவைத்தது தெரிய வந்தது. இதையடுத்து மாடசாமிபுரத்தைச் சேர்ந்த முத்துராமன், முத்து விஜய், கமலேஷ் மற்றும் குலசையைச் சேர்ந்த சின்னதுரை ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 


எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50
திருமண முன்விரோதம் காரணமாக மீனவரின் 2 படகுகளுக்கு தீ வைப்பு – 4 பேர் கைது | விசில் மீடியா