நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, மதுரை செக்கானூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனுக்கு நீதி கேட்டு விடுதலை களம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு காவல்துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. i8தையடுத்து, உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் நாகராஜன், புரட்சிகர தொழிலாளர் கட்சி மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநருக்கு நீதி கேட்டு நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனுக்கு நீதி கேட்டு நாமக்கல்லில் விடுதலை களம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை செக்கானூர் காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டும், குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் நாமக்கல்லில் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
