உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.11 உயர்வு

வணிக சிலிண்டர் விலை ரூ.11 உயர்வு. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.11 உயர்ந்து ரூ.3,016.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.11 உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.11 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.அதன்படி, நவம்பர் மாதத்திற்கான விலை அறிவிப்பில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.11 உயர்ந்து ரூ.3,016.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 1-ந்தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50