இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, படகில் இருந்த 7 மீனவர்களையும் அவர்களது விசைப்படகுடன் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவக் குடும்பங்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் உடனடியாக மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கச்சத்தீவு அருகே 7 தமிழக மீனவர்கள் கைது – படகுடன் மீட்க கோரிக்கை
கச்சத்தீவு அருகே 7 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை மீட்க அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்தனர். மீனவர்களையும் படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




