விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அரசு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் குற்றாலத்திற்கு அருவியில் குளிக்கச் சென்றபோது, கிரைண்டர் செயலி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற பொன்னுச்சாமியை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று தாக்கி மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது பணப்பை, செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றைப் பறித்ததுடன், கடவுச்சொல்லையும் மிரட்டி வாங்கியுள்ளனர். இதையடுத்து, அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் செயலி மூலம் மொத்தம் ரூ.7 லட்சத்தைப் பறித்துள்ளனர். இதையடுத்து, பணத்தைப் பெற்றுக்கொண்ட கும்பல், கொலை மிரட்டல் விடுத்து பொன்னுச்சாமியை கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுத் தப்பியது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜன், முத்துச்செல்வன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கி மேலாளரை கடத்தி ரூ. 7 லட்சம் பறித்த இருவர் கைது
வங்கி மேலாளரைக் கடத்தி ரூ.7 லட்சம் பறித்த வழக்கில் இருவரைக் கடையநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
பாலையம்பட்டியைச் சேர்ந்த வங்கி மேலாளர் பொன்னுச்சாமியைக் கடத்தி, மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கடையநல்லூர் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




