திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த இரண்டு ஸ்கார்பியோ கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது, கார்களில் இருந்த 7 பேரிடம் கை துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களைப் பிடித்த போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் வைத்திருந்த கை துப்பாக்கி மற்றும் அதன் பயன்பாடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர், கைது செய்யப்பட்ட 7 பேரும் எதற்காக திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வந்தனர், அவர்களிடம் இருந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் உள்ளதா, வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியில் கை துப்பாக்கியுடன் வந்த 7 பேர் கைது - இரண்டு கார்கள் பறிமுதல்
திருத்துறைப்பூண்டி அருகே போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இரண்டு சொகுசு கார்களில் கை துப்பாக்கியுடன் வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இரண்டு சொகுசு கார்களில் கை துப்பாக்கியுடன் வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த இரண்டு ஸ்கார்பியோ கார்களையும் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




