துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவர், திருநெல்வேலி பெருமாள்புரம் சாரா டக்கர் மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறையில், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வு வழிகாட்டியாகப் பணியாற்றிய பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய், ஆய்வுப் பணிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கேட்டதாக மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆடியோவையும் மாணவி வெளியிட்டார். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய், பணம் கேட்டது உண்மை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் பெலிசியா கிளாடிஸ், மாணவி அளித்த புகாரின் அடிப்படியில் பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாயை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
.
திருநெல்வேலி பி.எச்.டி. மாணவியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட பேராசிரியை சஸ்பெண்ட்
பி.எச்.டி. மாணவியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில், திருநெல்வேலி கல்லூரி பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி சாரா டக்கர் மகளிர் கல்லூரியில், பி.எச்.டி. ஆய்வு மாணவியிடம் ஆய்வுப் பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாக விசாரணையில் புகார் உறுதியானதாகக் கூறப்பட்டதால், பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
