கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள யாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவர் நேற்று இரவு சின்ன பேட்டிகானப்பள்ளி கிராமத்திற்கு அருகே மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, கொலையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, லட்சுமிபதியின் உறவினர்கள் உத்தனப்பள்ளி காவல் நிலையம் முன்பு திரண்டனர்.தொடர்ந்து, லட்சுமிபதியின் உறவினர்கள் ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் அருகே இளைஞர் குத்தி கொலை - உறவினர்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, உத்தனப்பள்ளி காவல் நிலையம் முன்பு ஒசூர்–ராயக்கோட்டை சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் அருகே இளைஞர் லட்சுமிபதி மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
