திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இடும்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோனது தொடர்பாக கோவில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவர் நகைகளைத் திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் திருடிய நகைகளை நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் கொடுத்ததாகவும், அவற்றை அவர் உருக்கி விற்பனை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 பவுன் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி அருகே கோவில் நகை திருட்டு - இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி சிவகிரிப்பட்டி இடும்பன் கோவிலில் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சிவகிரிப்பட்டி இடும்பன் கோவிலில் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவில் தற்காலிக ஊழியர் நிரஞ்சனா மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 பவுன் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




