தென்காசி மாவட்டம், கீழநீலிதநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பாலசுப்பிரமணியன் என்பவர் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே வங்கிக்கு வந்த விவசாயி திருமலைச்சாமி என்பவருக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் நகையை அடகு வைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வங்கியிலிருந்து வெளியே வந்தபோது திருமலைச்சாமி, பாலசுப்பிரமணியனைத் தாக்கியுள்ளார். இதைக் கவனித்த வங்கி ஊழியர்கள் உடனடியாகத் தலையிட்டு, அவரைத் தடுத்து நிறுத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவசாயி திருமலைச்சாமியைக் கைது செய்தனர். இதையடுத்து, வங்கியில் நகை அடகு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு தாக்குதலில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி ஊழியரை தாக்கிய விவசாயி கைது
வங்கியில் நகை அடகு வைப்பதில் ஏற்பட்ட தகறாரில் நகை மதிப்பீட்டாளரைத் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நகை மதிப்பீட்டாளரைத் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




