திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி போலீசார், பெரியபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள அகரம் கூட்டுச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில், லாரியில் இரண்டு மூட்டைகளில் 40 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்து கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம், வெய்யடிச்சான்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைக் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட முருகனை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரைப் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
லாரியில் கஞ்சா மூட்டைகள் கடத்தி வந்தவர் கைது - லாரி பறிமுதல்
அகரம் கூட்டுச்சாலை பகுதியில் லாரியில் கஞ்சா மூட்டைகள் கடத்தி வந்தவர் கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே லாரியில் 40 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
