ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரெட்டியாசத்திரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் தன்னை காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சாதியின் பெயரைக் கூறி திட்டி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஒட்டன்சத்திரம் தலைமை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, புகாரில் குறிப்பிடப்பட்ட கணேசமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து, சாதியின் பெயரைக் கூறி திட்டி கொடுமைப்படுத்தியதாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




