தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன், தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார்புரத்தைச் சேர்ந்த நவீன்ராஜா, மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த சூர்யா, தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த நாராயணசாமி, கோபி கண்ணன், கண்ணன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கடுகனூரைச் சேர்ந்த டெல்லிபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.77,300 ரொக்கம், 11 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் லாட்டரி எண்கள் எழுதப்பட்ட காகிதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை – 7 பேர் கைது
சிவந்தாகுளம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.77,300 ரொக்கம், 11 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் லாட்டரி எண்கள் எழுதப்பட்ட காகிதங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




