மாணவர்களின் குரல் என்ற பெயரில் நாடு முழுவதும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று சென்னைக்கு வந்தார்.சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடைபெற உள்ள மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னை வந்தார். இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யும், ராகுல் காந்தியும் ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர், பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்குச் சொந்தமான ஹோட்டலில் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் விருந்தளித்தார். ராகுல் காந்தியின் சென்னை வருகையும், முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு - கூட்டணி குறித்து ஆலோசனை
சென்னை வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, பாலவாக்கத்தில் உள்ள ஹோட்டலில் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் விருந்தளித்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




