திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பொழிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணைக் காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சிவா, நேற்று இரவு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இந்நிலையில், அந்தப் பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீசிய சிவாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட சிவாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேரன்மகாதேவி அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால், பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிவாவை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
