திண்டுக்கல் மாவட்டம் கருப்பதேவனூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், கருப்பதேவனூரைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் ராஜாங்கம் என்பவர் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 60 மதுபான பாட்டில்கள் மற்றும் 17 பீர் பாட்டில்கள் என மொத்தம் 77 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சட்டவிரோத மது விற்பனை செய்த ராஜாங்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது - 77 மதுபாட்டில்கள் பறிமுதல்
கருப்பதேவனூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது செய்த போலீசார் 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கருப்பதேவனூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த ராஜாங்கம் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து, போலீசார் 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




