சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிலிருந்து பணிபுரியும் வேலை தேடி வந்தார். அப்போது, ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றபோது, தனியார் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,500 முன்பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண், ஜி-பே மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்ற பிறகு வேலை குறித்த எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடுபாக்கத்தைச் சேர்ந்த ஆரோன் என்பவரைக் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், அவரது கூட்டாளிகளான மாதவரத்தைச் சேர்ந்த கோகுல் நாத் , கொடுங்கையூரைச் சேர்ந்த அஜ்மல் பாஷா ஆகியோரையும் கைது செய்தனர். மூவரும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்களை அமைத்து, வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் முன்பணம், பதிவுக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பலரிடம் மோசடி செய்துள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி – மூவர் கைது
சென்னையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் வேலை தேடுவோரைக் குறிவைத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




