உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ரேஷன் அரிசி கடத்தல் - அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை

பழனி ஜவஹர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி ஜவஹர் நகர் ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கடை ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ரேஷன் அரிசி கடத்தல் - அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை இடைத்தரகர்கள் மற்றும் கடத்தல் கும்பல் பணம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் விசாரிக்கும் போது, மாடுகளுக்கு தீவனமாக எடுத்துச் செல்வதாகக் கூறி தப்பிப்பதாகவும், சில நேரங்களில் அரிசி மூட்டைகளைக் கீழே போட்டு விட்டு ஓடிவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்தக் கடத்தலில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனவே, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50