உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் சாலை மறியல்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், மின்சார பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல்

சென்னையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கமான சி.ஐ.டி.யு. சார்பில், மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் அருகே உள்ள பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மின்சார பேருந்து கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், மின்சார பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்லவன் இல்லம் நோக்கிச் சென்ற போது போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதையடுத்து தடையை மீறி பல்லவன் சாலை மற்றும் மவுண்ட் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.  

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50