திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்தவர் சௌகத் அலி. இவர் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சிறுமலையிலிருந்து காரில் நாகல் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த முருகேசனின் மகன்கள் தயாநிதி, உதயநிதி மற்றும் லோகேஷ், விக்னேஷ் ஆகியோர் வழிவிடக் கோரி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சௌகத் அலியின் காரை பின் தொடர்ந்து சென்ற அவர்கள், ஒத்தக்கண் பாலம் அருகே காரின் பின்புறம் மோதி நிறுத்தி உள்ளனர். இதையடுத்து, சௌகத் அலி மற்றும் அவரது மகனை இரும்புக் கம்பியால் தாக்கினர். இது குறித்து சௌகத் அலி குடுமபத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நகர் தெற்கு போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
காரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்குதல் - 4 பேர் கைது
திண்டுக்கல்லில் காரை வழி மறித்து தந்தை, மகனை இரும்புக் கம்பியால் தாக்கிய வழக்கில் திமுக நிர்வாகியின் மகன்கள் இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் காரை வழி மறித்து சௌகத் அலி மற்றும் அவரது மகனை இரும்புக் கம்பியால் தாக்கிய வழக்கில், ஆத்தூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசனின் மகன்கள் இருவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




