தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேக்கரை கிராமத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குத்தகை அடிப்படையில் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இயற்கை நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்டதாக கூறப்படும் தடுப்பணைகள் மற்றும் செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இப்பகுதியில் இயற்கை நீரோடைகளின் நீர்வழித்தடங்களை மறித்து, சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், சோப்பு மற்றும் மதுபாட்டில் கழிவுகளால் விவசாயத்திற்குச் செல்லும் நீரும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து, செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இயற்கையான நீர்வழித்தடங்கள் தடையின்றி தொடர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ள நிலையில், தற்போது தொடங்கியுள்ள அகற்றும் பணி அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.
மேக்கரை அருகே இயற்கை நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள் அகற்றம்
இயற்கை நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள் அகற்றம் விவசாயிகள் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை
மேக்கரையில் இயற்கை நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள், விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




