திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஆதித்தன். இவர்கள் இருவரும் விவசாயத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக டிராக்டர் உள்ள நிலையில் புதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆதித்தன் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை ராஜா விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விவசாய நிலத்தின் மேல் சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்தது. இதனால் டிராக்டரில் இருந்த ஆதித்தன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, மகன் ஆபத்தில் இருப்பதை கண்ட ராஜா அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். இதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் பலி
விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்தனர்.
திருவாரூர் அருகே விவசாய நிலத்தில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பியால் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




