சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்குப்பம் முதல் முள்ளிக்குப்பம் வரையிலான 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகள், மீன் கடைகள் மற்றும் படகுகளில் கருப்புக் கொடிகளை கட்டி அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்தத் திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என மீனவ மக்கள் வலியுத்தினர். இந்த விவகாரத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து தங்களின் நிலைமையைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு - மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 மீனவ கிராம மக்கள் வீடுகள், கடைகள் மற்றும் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். அரசாணையை திரும்பப் பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




