சிவகங்கை மாவட்டம் கீழச்சலூரைச் சேர்ந்த கண்ணனின் மனைவி வனிதா. இவர் 30ம் தேதி பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 2-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், பிரசவத்திற்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வனிதா பிரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள், வனிதாவின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பின் பெண் உயிரிழந்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




