திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லனம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரி பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், நிலக்கோட்டை அருகே உச்சனம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார், தனது நண்பர்களுடன் குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவருடன் இருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய நிதிஷ்குமாரின் உடலை மீட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் நிதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குவாரி பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
வத்தலகுண்டு அருகே குவாரி பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். வத்தலகுண்டு அருகே குவாரி பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
வத்தலகுண்டு அருகே குவாரி பள்ளத்தில் குளித்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




