திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வரும் புகார்களில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து, திமுக, அதிமுகவினர் ஆதாரமற்ற புகார்களை தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலில் பணத்தை நம்பி நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை நாங்கள் மதம், ஜாதியை நம்பி தேர்தலில் நிற்கவில்லை, மக்களை நம்பி தான் தேர்தலின் நின்றோம் என்றும், எங்களுக்கு கிடைத்த அனைத்து ஓட்டுக்களும் முதலமைச்சர் விஜயின் ஒட்டு தான். மேலும், தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி மற்றும் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் இடையே மேடையில் ஏற்பட்ட சர்ச்சை குறித்த கேள்விக்கு, நாங்கள் அண்ணன்–தம்பியாக பழகி வருகிறோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
பொய்ப்புகார் தெரிவிக்கும் திமுக அதிமுக - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பொய்ப்புகார் தெரிவிக்கும் திமுக அதிமுக மீது அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் ரமேஷ், மக்கள் ஆதரவுடன் தேர்தலை சந்தித்ததாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் உண்மையெனில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார். மேடை சர்ச்சை குறித்து, நவல்பட்டு விஜி–கிறிஸ்டோபர் திலக் அண்ணன்–தம்பியாக பழகுவதாக தெரிவித்தார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




