உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பள்ளியில் மலம் வீச்சு விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர் கைது

அரியலூர் பள்ளியில் மலம் வீசப்பட்ட விவகாரத்தில் ஆசிரியர்களை மாற்றக்கோரியும், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும் பெற்றோர்கள் மற்றும் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் கீழவெளி அரசு பள்ளி ஆசிரியர் ஓய்வு அறையில் மலம் வீசப்பட்ட விவகாரத்தில் அனைத்து ஆசிரியர்களையும் மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
பள்ளியில் மலம் வீச்சு விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கீழவெளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 19 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர்களிடையே ஏற்பட்ட சமூக ரீதியான கருத்து மோதலைத் தொடர்ந்து, ஆண் ஆசிரியர்களின் ஓய்வு அறையில் மலம் வீசப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், தலைமை ஆசிரியர் முருகன் உள்ளிட்ட 3 பேரை பணியிட மாற்றம் செய்தது. இதையடுத்து, பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்யக்கோரியும், இரவுக் காவலரை நியமிக்க வலியுறுத்தியும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட விசிகவினர், போலீஸ் தடுப்புகளை மீறி முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அலுவலகக் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி பேருந்தில் ஏற்றி கைது செய்தனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50