நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் முன்னதாகவே பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்து அட்டைகள் மற்றும் கேக்குகளை வழங்கினார். இதை தொடர்ந்து மாணவிகளிடம் பேசிய அவர், நன்றாகப் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும், சிறப்பாகப் படிக்கும் மாணவிகளை முதலமைச்சரைச் சந்திக்கவும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் நாமக்கல் வரும்போது மாணவிகள் அனைவரையும் சந்திக்க வைப்பதாகக் கூறினார். இதை தொடர்ந்து, கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், தண்ணீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், பெற்றோர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது தேவைகள் இருந்தால் விடுமுறை நாட்களில் தன்னை நேரில் அணுகலாம் என்றும் தெரிவித்தார்.
நாமக்கல்லில் குழந்தைகள் தின விழா - மாணவிகளுக்கு வாழ்த்து அட்டை, கேக் வழங்கி சிறப்பித்த எம்எல்ஏ திலீப்
நாமக்கல்லில் குழந்தைகள் தின விழாவில் எம்எல்ஏ திலீப் மாணவிகளுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கி தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ திலீப், மாணவிகளுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கி, நன்றாகப் படிக்கவும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




