திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நயினார் குளத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகு சவாரி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நீர்வளத்துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, கிடைக்கும் வருவாயில் 80 சதவீதம் நிறுவனத்துக்கும், 20 சதவீதம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழுவுக்கும் வழங்கப்படும். தற்போது 2 பேர், 4 பேர் பயணிக்கும் வகையிலான நான்கு மிதிபடகுகள் மற்றும் ஒரு மோட்டார் படகு என மொத்தம் 5 படகுகள் இயக்கப்படுகின்றன. மிதிபடகில் 30 நிமிடங்களும், மோட்டார் படகில் 20 நிமிடங்களும் பயணிக்கலாம். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை படகு சவாரி நடைபெறும். இதையடுத்து, குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகக் கூறி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலில் குளத்தை சுத்தப்படுத்தி, நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விவசாயத்துக்கு பயன்படும் நீர்நிலையை சுற்றுலாத் தலமாக மாற்றுவதைவிட அதன் நீராதாரத்தைப் பாதுகாப்பதே முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர். மணிமுத்தாறு அணையில் தொடங்கப்பட்ட படகு சவாரி சில மாதங்களிலேயே கைவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டி, நயினார் குளத்திலும் அதே நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு
திருநெல்வேலி நயினார் குளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கழிவுநீர் கலப்பதாகக் கூறி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி நயினார் குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், குளத்தில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகக் கூறி நீர்நிலையை சுத்தப்படுத்திய பிறகே படகு சவாரியைத் தொடர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




