புதுச்சேரி அருகே உள்ள நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 40 மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு வந்துள்ளனர். நல்லவாடு மீனவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைத்ததைக் கண்டு அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து ஏற்பட்ட மோதலில், நல்லவாடு மீனவர்களின் மீன்பிடி வலைகள் கிழிக்கப்பட்டதுடன், பிடித்து வைத்திருந்த மீன்களும் சேதப்படுத்தப்பட்டதாகப் காவல் நிலையத்தில் நல்லவாடு மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளும், ரூ.40 லட்சம் மதிப்பிலான மீன்களும் சேதமடைந்துள்ளதாக நல்லவாடு மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்திலும், புதுச்சேரி மீன்வளத் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் மீனவர்கள் மோதல் – ரூ.60 லட்சம் மதிப்பிலான வலை, மீன்கள் சேதம் என புகார்
நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வலை, மீன்கள் சேதம் என புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி நல்லவாடு மீனவர்களுக்கும், கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் ரூ.60 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மற்றும் மீன்கள் சேதமடைந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




