ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை சாத்தங்குடி வழியாக முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளுக்குச் செல்லத் தயாராக இருந்த அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நாட்களாக சாத்தங்குடி கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படாததால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் கடலாடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கீழக்கிடாரம், மீனங்குடி, வெள்ளாங்குளம், பாப்பாக்குளம் வழியாக வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரசு பேருந்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
சாத்தங்குடிக்கு 2 நாட்களாக பேருந்து இல்லை என்பதால் அரசு பேருந்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலாடியில் இருந்து சாத்தங்குடி கிராமத்திற்கு இரண்டு நாட்களாக அரசு பேருந்து இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




