விருதுநகர் மாவட்டம் மின்வாரியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.இதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் இலவச மின்சார உரிமையைத் தொடர்ந்து உறுதி செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விருதுநகரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மின்வாரியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




