கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது பாட்டி, கோத்தகிரி அருகே கூக்கல்தெரை இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், பாட்டியைப் பார்த்துவிட்டு திரும்புவதற்காக பிரவீன் வீட்டிலிருந்து புறப்பட்டு, கூக்கல்தெரை–கம்பட்டிகம்பை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை திடீரென வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது, யானை அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதையும், அருகில் யானையின் காலடித் தடங்கள் இருப்பதையும் கண்டு வனத்துறையினர் மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பிரவீனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கூக்கல்தெரை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் வெளியே செல்ல மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை தாக்கி வாலிபர் உயிரிழப்பு
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோத்தகிரி அருகே பாட்டியைப் பார்க்கச் சென்ற இளைஞரை காட்டு யானை தாக்கிக் கொன்றது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




