மீஞ்சூர் அருகே வழுதிகைமேடு பகுதியில் பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை செய்து வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவரை தனசேகரன் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாதந்தோறும் மாமூல் வழங்க வேண்டும் என மிரட்டியுள்ளார். மேலும், தனசேகரனின் கூட்டாளி ஒருவர் சுந்தரலிங்கத்தின் சட்டைப் பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொன்னேரி நீதிமன்றம் தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வடசென்னை அனல் மின் நிலைய பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் தனசேகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த தனசேகரன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நிலையில், அவரது ஜாமீனை பொன்னேரி நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் தனசேகரன் மீண்டும் கைது செய்யப்பட்டு எண்ணூர் தனசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடி தனசேகரன் ஜாமீன் ரத்து
தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடி தனசேகரன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனசேகரன், ஜாமீனில் வெளியே வந்த பின்னர் மீண்டும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் புகார் எழுந்தது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




