தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இலத்தூர் விலக்கு பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது, காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, சுரேஷ் இளவரசனின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் மொத்தம் 94 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இச்சம்பவம் தொடர்புள்ள சுரேஷ் இளவரசன், முத்துமாரி, முத்துராஜ், சதீஷ் ஆகிய நான்கு பேரையும் இலத்தூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, புகையிலைப் பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசியில் காரில் கடத்தி வந்த 94 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 4 பேர் கைது
தென்காசியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தியதாக, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் சுரேஷ் இளவரசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




