புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாதேஷ், வில்லியனூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியைச் சேர்ந்த நிர்மல், விமல், மோகன், தினேஷ் உள்ளிட்டோருக்கும் மாதேஷுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சமாதானம் பேச வேண்டும் எனக் கூறி மாதேஷை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தோப்புக்கு அழைத்துச் சென்ற அவர்கள், அங்கு அவரை முட்டிபோட வைத்து கையாலும் கட்டையாலும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த சிலரையும் வரவழைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மாதேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கஞ்சா போதையில் மாணவர்கள் தாக்குதல்
புதுச்சேரியில் மாணவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




