திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லுார் பகுதியைச் சேர்ந்த நடராஜன் தனது மகன் விஜயை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினார். இதற்காக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஸ்டெல்லா பேபியிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.76 ஆயிரமும், நவம்பர் மாதத்தில் ரூ.4.54 லட்சமும் செலுத்தினார். இதையடுத்து, மொத்தம் ரூ.5.30 லட்சம் வழங்கியதாக கூறியுள்ளார். மேலும், டெல்லி சென்று வந்தது, என்.ஓ.சி., உள்ளிட்ட செலவுகளுக்காக மேலும் ரூ.1.25 லட்சம் செலவு செய்ததாக நடராஜன் புகாரில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, வெளிநாட்டில் வேலை கிடைத்ததாக போலியான நிறுவனங்கள் மற்றும் தவறான தகவல்கள் அளித்து தன்னையும், தன் மகனையும் ஸ்டெல்லா பேபி ஏமாற்றியதாக நடராஜன் புகாரளித்தார். இதையடுத்து திருநெல்வேலி ஜங்ஷன் போலீசார் ஸ்டெல்லா பேபியை கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.30 லட்சம் மோசடி - டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
திருநெல்வேலியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.30 லட்சம் மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஸ்டெல்லா பேபி கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




